ஜனாதிபதி தேர்தலே முதலில் ஊகிக்கப்படுகிறது_முன்னால் பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன்.

(ஹஸ்பர் ஏ.எச்) திருக்கோணமலை மாவட்ட ‘Trincomalee Super 40’ கிரிக்கெட் கழத்தின் ஏற்பாட்டில் ‘Battle of East – 2024’  ற்கான இரண்டாவது மென்பந்து  சுற்றுப் போட்டியை கடந்த 10 மற்றும் 11ம் திகதிகளில் திருக்கோணமலை இந்துக்கல்லூரி மைதானத்தில் திரு.மார்ட்டீன் G.ஜெயகாந்த் தலைமையில் சிறப்பாக நடாத்தி முடித்தனர்.
‘Trincomalee Super 40’  மற்றும் ‘ ‘Batticaloa Masters’ ஆகிய கழகங்களுக்கிடையில் இரண்டு நாட்களில் 20 க்கு 20 ஓவர்கள் என்ற அடிப்படையில் இவ்விரு போட்டிகள் நடாத்தப்பட்டதோடு அப்போட்டிகளில் இவ்விரு அணியினரும் இரண்டிற்கு இரண்டு என்ற அடிப்படையில் வெற்றிகளை தமதாக்கிக்கொண்டு சம்பியன் பட்டத்தை சமமாக பகிர்ந்துகொண்டனர்.
குறித்த சுற்றுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னால் பிரதியமைச்சர்  விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் கலந்துகொண்டு வீரர்களுக்கான வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தார் .
இதன் பொது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விநாயக மூர்த்தி முரளிதரன்
வடகிழக்கில் எங்களது கட்சி திறம்பட செயற்பட்டு வருகிறது எதிர்காலத்தில் முதலில் ஜனாதிபதி தேர்தல் வருவதாக காணப்படுகிறது அந்த நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்போம் என்றார்.