(இ.சுதாகரன்) பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட் / பட் / உதயபுரம் தமிழ் வித்தியாலயத்திற்கு புல் வெட்டும் இயந்திரம் கையளிப்பு பெரும் மதிப்புக்குரிய ரங்கன் ஐயா வின் நற்பணி மன்றத்தின் சார்பில் சமூக செயற்பாட்டாளர் திரு மேவின் ஆசிரியரால் பாடசாலை யின் அதிபர் திரு கோகுலராஜ் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
பாரிய குறைபாடாகக் காணப்பட்ட புல் அகற்றும் இயந்திரமானது துரித முயற்சியால் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் பேசிய பாடசாலை யின் அதிபர்
ரங்கன் ஐயா மிகச்சிறந்த சமூக சேவையாளர் என்றும் அவரது உதவிகள் பாடசாலைக்கு தொடர்ந்தும் தேவை என்றும் குறிப்பிட்டு நன்றிகளை தெரிவித்து
கொண்டதுடன் பல வழிகளிலும் உதவியை வழங்கிய ஆசிரியர்கள் திரு பிரேம் ,கமலநேசன் ஆசிரியர்களையும் பாராட்டினார்.