சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் பணிப்பாளர் அம்பிகா சிறிதரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராக யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் திருமதி கோசலை மதன் கலந்து கொண்டு நிகழ்நிலைச் சட்டத்தின் பிரயோகம் மற்றும் அதன் விளைவுகள் தொடர்பாக தெளிவுபடுத்தியிருந்தார்.
இதன்போது நிகழ்நிலைச் சட்டத்தில் உள்ள குறைபாடுகள்,அதனை சீர் செய்யக்கூடிய முறைமைகள்,மேற்படி சட்டத்தால் பொதுமக்கள் எதிர்கொள்ளக்கூடிய உரிமை மீறல்கள்,சட்டத்தில் உள்ள சாதக-பாதக விடயங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.