(சுமன்) சிறந்த சமூக சேவையாளர்களைத் தெரிவு செய்து விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு உலகத் தமிழ் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் கொழும்பு தாஜ் சமுத்திரா நட்சத்திர விடுதியில் இடம்பெற்றது.
உலகத் தமிழ் பல்கலைக்கழக பணிப்பாளர் மற்றும் பன்னிரண்டு சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறந்த சமூக சேவைகளை மேற்கொண்டு வரும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயறில் சமூக சேவைக்கான கலாநிதி பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரான இவர் அம்பாறை மாவட்டத்தில் மிகவும் அறியப்பட்ட சமூக சேவையாளர் இவருடைய சேவைகள் அம்பாறை மாவட்டம் மாத்திரமின்றி இலங்கையின் பல பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
துணிச்சலும் சிறந்த ஆளுமையும் மிக்க இவர் சமூக சேவைக்கான கலாநிதி பட்டத்தை தனது அயராத தொடர் சமூகப் பணிக்காக இள வயதில் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதும், பாராட்டுக்குரியதுமாகும்.
இதேவேளை சிறந்த சமூக சேவையாளருக்கான கலாநிதி பட்டம் பெற்ற ஜெயசிறில் அவர்களுக்கு இந்தியா தமிழ்நாடு அரசியற் பிரமுகர் பழ.நெடுமாறன் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தாயகத்தில் ஏழ்மையான குடும்பங்களுக்கு இயன்ற உதவிகளை செய்து தாயகத்தின் துடிப்புள்ள இளைஞனுக்கான அதிகௌரவமான சமூகசேவைக்கான கலாநிதி பட்டம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைவதோடு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதோடு உங்களுடைய முயற்சியும் செயற்பாடும் தொடர எனது அன்பான வாழ்த்துக்கள் என அவர் தனது வாழ்த்துரையில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.