அணிந்திருந்த ஹெல்மெட்க்குள் போதைப் பொருள்

( வாஸ் கூஞ்ஞ)
சூட்சயமான முறையில் போதைவஸ்து வியாபாரத்தில் ஆலயப் பகுதியில் ஈடுபட்ட நபர் ஒருவர் குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
இச் சம்பவம் வெள்ளிக்கிழமை (09) மாலை மன்னாரில் இடம்பெற்றுள்ளது
இச் சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது

மன்னார் மாவட்ட  குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து
மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபால அவர்களின் வழிகாட்டலில் பொலிஸ் அத்தியட்சகர் ஹேரத் மற்றும் மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி சில்வா அவர்களின் தலைமையில் சென்ற பொலிஸ் கோஷ்டியினர் சாவட்காடு புனித அந்தோனியார் ஆலயப் பகுதியில் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்த நபரை பரிசோதித்த போது ஹெல்மெட்க்குள் ஐஸ் போதைப் பொருள் இருக்கக் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது
மன்னார் விடத்தல்தீவை பிறப்பிடமாகவும் வவுனியாவை வளர்ப்பிடமாகவும் கொண்ட நபர் ஒருவரே (வயது 31) 20 கிராம் 850 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்
இச் சந்தேக நபர் விடத்தல்தீவிலிருந்து மன்னாருக்கு வியாபாரத்துக்கு கொண்டு வந்ததாக ஆரம்ப விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது