சுகாதார துறையைச் சார்ந்தவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதால் சவாலுக்கு உள்ளாகியுள்ளது. ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ்

வாஸ் கூஞ்ஞ) 

ஐந்து வருட கால விடுமுறையில் வெளிநாட்டுக்குச் செல்லலாம் என்ற திட்டத்தால் எனக்கு நாளாந்தம் சுமார் இருநூறு கோவைகள் வந்த வண்ணம் இருக்கின்றது. இதில் அதிகமானோர் மருத்துவத் துறையைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். இவர்களின் இடத்தை எவ்வாறு சமாளிப்பது என்பதே பெரும் சவாலாக உள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய இராச்சிய மன்னார் நலன்புரி சங்கதத்pன் நிதி அனுசரனையுடன் 38 மில்லியன் ரூபா செலவில் உயர்தர வசதிகளுடன் மன்னார் பொது வைத்தியசாலையிலுள்ள மகற்பேறு வார்ட்டுகளை புனரமைக்கப்பட்ட நிலையில் அவற்றை வெள்ளிக்கிழமை (09) திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அத்தியாகக் கலந்த கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் இங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்

இலங்கை சுகாதார துறை மற்றும் கல்வித் துறைகள் மிகவும் சவாலுக்கு உள்ளாகியுள்ளது இலங்கையில் மிகவும் குறைவாக வரி அறவிடுவது எமது நாடாகும்.

இந்த நாடானாது முதலாம் ஆண்டு தொடக்கம் பல்கலைக்கழகம் செல்லும் வரை மாணவர்களுக்கு இலவச கல்வியை வழங்கி வருகின்றது.

மருத்துவத்திலும் இலவச உதவிகளையும் சகல விதமான மருத்துவ வசதிகளையும் வழங்கி கொண்டு வருவது இந்த நாடு.

இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து அமைச்சுக்களிலும் மிகப் பாரிய மாதாந்த செலவாகக் கொண்டிருப்பது சுகாதார அமைச்சாகும்.

2019 ஆம் ஆண்டிலே சுகாதார அசை;சின் செயலாளராக நான் இருந்த வகையில் ஒரு மாதத்துக்கு பத்து மில்லியன் ரூபாவை இந்த சுகாதார அமைச்சு செலவு செய்யப்பட்டு வருகின்றது.

எனவேதான் இந்த பாரிய சுமையை சுமந்து கொண்டுதான் அரசாங்கம் இருங்கின்றது என சொல்லுவதைவிட மக்களுக்கு இருக்கின்றது என சொல்லலாம்.

தற்பொழுது சுகாதார சேவையில் பாரிய சவாலை நோக்கும் நிலை உருவாகியுள்ளது.

மருத்துவர்கள் மருத்துவ தாதிகள் மற்றும் மருத்துவ தொழில் நுட்பம் கொண்டவர்கள் வெளியேறிக் கொண்டு இருக்கின்றார்கள்.

இதன் காரணமாக பல வைத்தியசாலைகளில் சிறந்த வைத்திய சேவைகளை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதனால் வைத்திய சேவை பணிப்பாளாகள் , அத்தியட்சகர்கள் , நிர்வாகங்கள் தடுமாறிக் கொண்டு இருக்கின்றன.

இவ்வாறான சவால்களுக்கு மத்தியில்தான் சுகாதார சேவைகளை முன்னெடுக்க வேண்டி இருக்கின்றது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற பொருளாதார நெருக்கடியின் காரணமாக தற்பொழுது ஆட்சேர்ப்பு திட்டம். கட்டிட நிர்மான திட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளது.

இருந்தும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இது தொடர்பாக தொடர்புகளை மேம்படுத்தி வருகின்றோம்.

நான் இதற்கு முன் வடக்கு மாகாணத்தில் ஆளுநராக இருந்த வேளையில் மன்னார் மற்றும் முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் கட்டிடங்கள் அமைப்பதற்கு இந்திய அரசாங்கத்திடம் முன்மொழி செய்திருந்தேன்.

அப்பொழுது அதை முன்னெடுத்து செல்ல முடியவில்லை. ஆனால் இப்பொழுது 200 மில்லியன் ரூபாவிலிருந்து 260 மில்லியனாக உயர்த்தி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அன்மையில் இந்திய உயர் ஸ்தானிகரை நான் சந்தித்தபோது இந்த இரண்டு வைத்திசாலைகளின் தேவைகளை முன்னுரிமைப்படுத்தி  பேசியுள்ளேன்.

கடந்த இரண்டு வருடங்களாக எங்களுக்கு வழங்கப்படுகின்ற மாகாண நிதியூடாக ஏற்கனவே தொடங்கப்பட்ட வேலைத் திட்டங்களே நடைபெற்றுக் கொண்டு இருக்கிறன.

புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்படாவிடினும் சென்ற வருடம் மன்னாருக்கு 26 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக மாகாணப் பணிப்பாளர் தெரிவித்தார்.

நிதி ஓதுக்கீடுகள் மிக குறைவாக காணப்பட்டாலும் இது நிரந்திரமாக அமையாது. எமது ஜனாதிபதி இதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றார்.

இங்கு சுகாதார பகுதியில் ஆளனி பற்றாக்குறை தொடர்பாக தெரிவிக்கப்பட்டது.. ஜனாதிபதி இரண்டு திட்டங்களை வழங்கியுள்ளார். ஒன்று யாழ் போதனா வைத்தியசாலையிலுள்ள வெற்றிடங்களை நிறப்புவது

மற்றையது மாகாண சபையில் காணப்படுகின்ற வெற்றிடங்கள். இவற்றை நிரப்புவது மற்றது தேவையான வெற்றிடங்களை அடையாளப்படுத்துவது.

இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஆகவே ஐந்து மாவட்டங்களிலும் சுகாதார சேவைகள் சம்பந்தமான வெற்றிடங்கள் நிரப்பப்படும்.

புதிய ஆளனிகள் சேர்க்கப்படாவிட்டாலும் ஜனாதிபதியின் விஷேட அனுமதியில் வடக்கு மாகாணத்தில் மாற்றாற்றால் உள்ளவர்களுக்கான விஷேட பராமரிப்புக்காக நவீன வைத்தியசாலை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இருந்தும் தற்பொழுது உள்ள பெரிய சவால் என்னவென்றால் எங்கிருந்து சுகாதார பகுதிக்கு ஆளனியை கொண்டு வருவது என்ற கேள்வி இருந்து வருகின்றது.

ஐந்து வருட கால விடுமுறையில் வெளிநாட்டுக்குச் செல்லலாம் என்ற திட்டத்தால் எனக்கு நாளாந்தம் இருநூறு கோவைகள் வந்த வண்ணம் இருக்கின்றது.

இதில் அதிகமானோர் மருத்துவத் துறையைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.

இவர்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்புவார்களா என்பதும் சந்தேகமாகவே காணப்படுகின்றது.

இலவச கல்வியை பெற்று பல்கலைக்கழகம் வரைச் சென்று வைத்தியர்களாகவோ அல்லது வேறு சுகாதார துறைகளில் விஷேடமாக இலவசமாக பயிற்றுவித்தவர்கள் வெளியே சென்றால் யாரைப் பிடிப்பது என்பதுதான் சவாலாக இருக்கின்றது.

இது இங்குள்ள சவால் மட்டுமல்ல இலங்கை பூராகவும் மூளைந்சாலிகள் வெளியேறி வருவதால் உள்ள சவாலாக அமைந்துள்ளது.

பொருளாதாரப் பிரச்சனையால் இவ்வாறு எல்லோரும் வெளியேறினால் இந்த நாட்டின் நிலைமை என்னாவது? இந்த நாட்டின் வளர்ச்சியில் எம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது.

இங்கு கடமை புரியும் மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரி.வினோதன் மற்றும் மகற்பேறு வைத்திய நிபுணர் புஸ்பகாந்தன் இவர்கள் வெளிநாடு சென்று வந்தாலும் இவர்கள் இப்பகுதில் சேவை செய்ய வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் சேவை செய்வதை பாராட்ட வேண்டும்

வெளிநாட்டுக்கு எமது உறவுகள் சென்றாலும் அவர்களின் இதயம் இங்குதான் இருக்கின்றது என்பது அவர்களின் செயல்பாட்டின் மூலம் தெரிகின்றது என்றார்.