மட்டு நகரில் பெண்சட்டத்தரணி மீதும் அவரது கணவன் மீதும் தாக்குதல் நடாத்திய சம்பத்தில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உட்பட இருவருக்கு 14 நாள் விளக்கமறியல்

49747079 - a gavel and a name plate with the engraving judgment

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு நகரில் நீதிமன்றத்திற்கு அருகாமையிலுள்ள  சட்டத்தரணி ஒருவரின் காரியாலயத்தினுள் அத்துமீறி உள்நுழைந்து பெண்சட்டத்தரணியையும் அவரது கணவரை தாக்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உட்பட இருவரையும் எதிர்வரும் 20 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச். முகமட் ஹம்சா நேற்று செவ்வாய்க்கிழமை (6) உத்தரவிட்டார்.

புதூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான பெண் ஒருவரின் கணவன் அவவரை விட்டு வேறு திருமணம் முடித்ததையடுத்து  அவருக்கு எதிராக தாபரிப்பு பணம் கோரி பெண்சட்டத்தரணி இலவசமாக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து கணவனிடம் தாபரிப்பு குறித்த  பணத்தை பெற்றுவருகின்றார்.

இந்த நிலையில் குறித்த பெண் சட்டத்தரணியின் காரியாலயத்துக்கு சாரதி பயிற்சி நிலையத்தை நடாத்திவரும் உரிமையாளர் ஒருவருடன் சென்று சட்டத்தரணிக்கான  பணத்தை சாரதி பயிற்சி நிலையத்தை நடாத்திவரும் உரிமையாளர் வழங்கிய தையடுத்து குறித்த பெண்ணிடம் நீ வழங்னவேண்டிய பணத்தை நீ தராமல் ஏன் அவர் தருகின்றார் இவர் யார்  எனவே நான் இந்த வழக்கில் இருந்து விலகப் போவதாக தெரிவித்தார்.

இதன் பின்னர் சம்பவதினமான  நேற்று காலை 9 மணியளவில் குறித்த பெண் நீதிமன்றில் வழக்குpற்கு ஆஜராகாத நிலையில் நீதிமன்ற பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்டதையடுத்து  மீண்டும் சாரதி பயிற்சி நிலையத்தை நடாத்திவரும் உரிமையாளரான இரண்டு பிள்ளைகனின் தந்தையுடன் பெண்சட்டத்தரணியின் காரியாலயத்துக்கு சென்ற நிலையில் இந்த வழக்கில் நான் ஏற்கனவே ஆஜராக முடியாதுடின தெரிவித்தாகவும் வெறு சட்டத்தரணியை நாடவும் என தெரிவித்ததையடுத்து   சட்டத்தரணிக்கும் பெண்ணுக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் குறித்த ஆணும் பெண்ணும்  சட்டத்தரணி மீதும் அவரது கணவர் மீதும் தலைகவசத்தால்; தாக்குதல் மேற்கொண்டதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இதனையடுத்து தாக்குதலுக்கு உள்ளான சட்டத்தரணியும் அவரது கணவரும்   வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் சட்டத்தரணி மீது தாக்குதல் மேற்கொண்ட ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் அங்கிருந்து பொலிஸ் நிலையம் சென்று தம்மை சட்டத்தரணியும் அவரது கணவரும் முறைகேடான வார்த்தைகளால் பேசி எங்கள் மீது தாக்க முற்பட்டபோது அவர்கள் இருவர் மீதும் தாக்கியாதாகவும் அவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யத நிலையில் குறித்த பெண்ணுக்கு நீதிமன்ற பிடிவிறாந்து உள்ள நிலையில் அவரை அந்த குற்றத்துக்கும்  மற்றும் சட்டத்தரணி காரியால யத்துக்குள் அத்துமீறி சட்டவிரோதமாக உள்நுழைந்து  அவர்கள் இருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் பெண்ணையும் அவருடன் சென்ற ஆண் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச். முகமட் ஹம்சா முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இருவரையும் எதிர்வரும் 20 ம்திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.