சர்வதேச லயன்ஸ் கழகத் தலைவியின் ஊடக மாநாடு.

(அஷரப் ஏ சமத்) 200 நாடுகளில் உள்ள லயன்ஸ் கழகங்களின் தலைவி லயன்ஸ் டாக்டர் பற்றி ஹில் (கனடா) அமெரிக்காவில் வாழ்பவர் கடந்த 30 வருடங்களுக்குப் பிறகு சர்வதேசத் தலைவி ஒருவர் முதல் தடவையாக இலங்கைக்கு கடந்த வாரம் வருகை தந்திருந்தார்.
அவர் இலங்கையில் உள்ள லயன்ஸ் 306 சர்வதேச கழகத்தின் தலைவர் லயன்ஸ் இந்கர கௌசல்யா, லயன்ஸ் மகேந்திர அமரசூரிய, மற்றும் லயன்ஸ் மகேஷ் பஸ்க்குல் சர்வதேச பணிப்பாளர்கள் ஆகியோர்கள் கொண்ட ஊடக சந்திப்பொன்று கொழும்பு சங்கரில்லா ஹோட்டல் நடாத்தினார்கள்.
இங்கு கருத்து தெரிவித்த சர்வதேச லயன்ஸ் கழகத்தின் தலைவர் டாக்டர் பற்றி ஹில்
இலங்கை உட்பட 200 நாடுகள் சர்வதேச லயன்ஸ் கழகங்கள் அங்கத்துவமாகக் கொண்டுள்ளன. 1958 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச லயன்ஸ் கழகம் ஓர் சமுக சேவை சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமாகும். இந்தியாவில் இருந்து லயன்ஸ் கழகம் இலங்கையில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது இலங்கையில் 600 லயன்ஸ் கழகம் உள்ளது… 18 ஆயிரம் லயன்ஸ் அங்கத்தவர்களும் , லியோ 30 ஆயிரம் பேர் உள்ளனர் ? லயன்ஸ் கழகம் அடுத்த வருடத்திலிருந்து இரட்டிப்பாக்கப்படும். இந் நிறுவனம் உலகில் ஏற்படும் திடீர் இயற்கை அனர்த்தங்கள், உணவு, சுகாதாரம் போஷாக்கு, வீடமைப்பு, அனர்ந்தங்களுக்கும் உடன் உதவும் சர்வதேச சமுக அபிவிருத்தி நிறுவனமாகும்
இலங்கையில் 2004 ஏற்பட்ட சுனாமி அனர்த்தங்களின்போது 5 மாவட்டங்களில் எமது உதவித்திட்டங்களை வழங்கினோம். அதில் 1300 வீடுகளை நிர்மாணித்தோம். பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் போன்ற பாரிய திட்டங்களை முன்னெடுத்து அதனை வெற்றிகரமாக நிர்மாணித்தோம். அதில் மக்கள் இன்றும் நன்மை அடைந்து வருகின்றனர். இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் இலங்கையில் 5 வருடத்திற்கு 10 ஆயிரம் மாணவர்கள் சத்துணவுத் திட்டமொன்றை நாட்டின் பல்வேறு பகுதிகளில் எமது கிளை லயன்ஸ் கழகங்கள் முன்னெடுத்து வருகின்றது. அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம், கண் சத்திர சிகிச்சை, மற்றும் சிரமாதான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 5.9 மில்லியன் மக்கள் கடந்த 6 மாதங்களில் லயன்ஸ் கழகத்தின் நன்மை அடைந்துள்ளார்கள். யாழ்ப்பாணம், உட்பட வடக்கு கிழக்கு பிரதேசத்தில் 56 கழகங்கள் உள்ளன. அந்தந்த பிரதேச கழகங்கள் தொடர்ச்சியாக அவர்கள் பிரதேசத்தில் பல்வேறு சமூக அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் இரத்த தானம். கண் சத்திர சிகிச்சை முகாம், பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு திட்டம் போன்ற வாராந்தம், மாதாந்த திட்டங்களும் அடங்குகின்றன.
வட கிழக்கில் 3 தசாப்தகால யுத்தம். நடைபெற்றது அங்கு லயன்ஸ் கழகத்தின் பாரிய உதவிகள் இதுவரை அங்கு கிடைக்கவில்லை. சுனாமி காலத்தில் மட்டும் வீடுகள் பாடசாலைகள்,வைத்தியசாலைக்கு உதவித் திட்டங்கள் லயன்ஸ் கழகம் உதவியது. அதன் பின்னரான காலத்தில் அங்கு லயன்ஸ் கழகத்தின் பாரிய உதவிகள் கிடைக்கவில்லை.
கடந்த காலத்தில் இலங்கை பொருளாதார பிரச்சனையில் பின்னடைவை அடைந்தது
உங்கள் வருகையால் இலங்கைக்கு ஏதாவது அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட தா ? என என்னால் எழுப்பப்பட்ட கேள்விக்கு சர்வதேச தலைவி பதில் அளிக்கவில்லை.
இலங்கைத் தலைவர் பதில் அளித்தார் – தலைவி கங்காராம பன்சலையில் சிரமதானம் , நுவரேலியாவில் சிரமதானம் சுனாமி காலத்தில் கட்டப்பட்ட வீடுகள் பாடசாலைகள் புலமைப்பரிசில் சுகாதாரம் கண் சத்திர சிகிச்சை ,பாடசாலை சத்துணவுத் திட்டங்களை நாங்கள் உதவினோம் என பதில் அளிக்கப்பட்டது. லயன்ஸ் கழகம் ஒருபோதும் இன,பிரதேச மொழி மதம் பாகுபாடுகள் இல்லை உலகில் உள்ள எல்லா இனங்கள் நாடுகளுக்கும் உதவி வருகின்றன. என்றும் இலங்கைத் தலைவர் பதிலளித்தார்.