உணவுப் பொருட்களின் விலை குறைப்பு.

நாட்டில் ஆறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலை வரம்புகள் திருத்தப்பட்டுள்ளன.

வர்த்தகர்களிடமிருந்து பொருட்களை அதிக இலாபத்துடன் வாங்க நுகர்வோருக்கு வழிகாட்டும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. காய்ந்த மிளகாய், வெள்ளை சீனி, இறக்குமதி செய்யப்பட்ட நெத்தலி, இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் பருப்பு ஆகியவற்றின் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலை வரம்புகள் திருத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய, ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 870 ரூபாவுக்கும், ஒரு கிலோ வெள்ளை சீனி 265 ரூபாவுக்கும், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ நெத்தலி 900 ரூபாவுக்கும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 320 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும், ஒரு கிலோ உருளைக்கிழங்கு 120 ரூபாவாகவும் பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விலை 295 ரூபாவாகவும் வெளியிட நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் திருத்தம் | Prices Of Essential Food Items In Sri Lanka