சுதந்திர தின தேசிய நிகழ்வில் நாட்டு மக்கள் பங்கேற்கத் தடை என்றால் இங்கு எங்கே சுதந்திரமுள்ளது?

கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

வீதிகளுக்கு தடுப்பு வேலிகளைப் போட்டு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு நாட்டு மக்களுக்கு பங்கேற்க வாய்ப்பளிக்காமல்76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளது.சுதந்திர தின தேசிய நிகழ்வில் பங்கேற்பதில் இருந்து நாட்டின் பொது மக்களை தடுத்து தடை செய்தால் இங்கு சுதந்திரம் இல்லையே என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நிகழ்நிலை காப்பு சட்டம் என்ற பெயரில் தகவல் அறியும் அரசியல் செய்யும் கருத்துத் தெரிவிக்கும் மக்களின் உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.இது சுதந்திரம் அல்ல என்றும்இவங்குரோத்து இலங்கையிலும் இந்த தருணத்தில் கூட திருட்டுகள் நடந்து வருகின்றன.மருந்துப் பொருட்கள் பலவற்றில் அமைச்சர்களும் அதிகாரிகளும் திருடி தரம் குறைந்த மருந்துப் பொருட்களை மக்களுக்கு வழங்கியுள்ளனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சுதந்திர தின நிகழ்வுக்கு செலவழிக்கப்பட்ட கோடிக் கணக்கான பணத்தை பாடசாலைகளின் அபிவிருத்திக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்றாலும்

அரசாங்கம் அவ்வாறான ஒன்றை செய்யவில்லை.ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வாழ்வதற்கான உரிமையை பாதுகாப்போம்.இதற்காக எடுக்க முடியுமான துணிச்சலான நேரடி நடவடிக்கைகளை சகலதையும் எடுப்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 86 ஆவது கட்டமாக

அனுராதபுரம் நொச்சியாகம வித்யார்த்த மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் இன்று (05) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

🟩ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மாளிகை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

ஏனைய கட்சித் தலைவர்கள் 2024 இல் கூட மக்களை ஏமாற்றி மாளிகை அரசியலில் ஈடுபட்டு அரச மாளிகைகளின் சொகுசுகளை அனுபவிக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர்.ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில்இநாட்டின் மாளிகைகள் நவீன தொழில்நுட்பம்இஆங்கிலம் என்பன கற்பிக்கும் பெரிய பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும். எனவே மாளிகைகள் பற்றிய கனவுகளை வைத்துக் கொள்ளாதீர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩மொழியை மையமாக் கொண்ட அரசியலை நிறுத்துங்கள்!

மொழியை மையமாக வைத்து அரசியல் நடத்தும் காலத்தை நிறுத்த வேண்டும். நாட்டிலுள்ள 41 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு உயர் ஆங்கில மொழிக் கல்வியை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.இனம்,மதம், சாதி,குல பேதங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி அரசியல் கோஷங்களுக்கு பணயக்கைதிகளாக இருக்க வேண்டாம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.

பொருளாதாரப் பயங்கரவாதிகளால் வங்குரோத்தாகியுள்ள நாட்டில்,சொல்லும் காரியங்களைச் செய்யலாமா என்ற விடயத்தில் சிலருக்குப் பிரச்சினை எழுந்தால், இந்த கேள்விகளை எதிர்க்கட்சியில் உள்ள அரசியல் தலைவர்களிடம் கேளுங்கள். ஏனையவர்கள் நன்றாகச் செய்கிறார்கள் என்று சொன்னாலும்,யாரும் எம்மைப் போன்ற பணிகளை முன்னெடுக்கவில்லை.ஐக்கிய மக்கள் சக்தி எந்த அதிகாரமும் இன்றி பிள்ளைகளுக்கு பாடசாலை ஊடாக சிறந்த வாய்ப்பை வழங்கி வருகிறது.இது எதிர்கால தலைமுறைக்கான முதலீடு.இங்கு அரசியலை முன்னெடுக்கவில்லை.இலவசக் கல்விக்கான பக்க பலத்தை எம்மால் முடியுமான மட்டத்தில் வழங்கி வருகிறோம்.பாடசாலை கல்வி அடுத்த கட்டத்தை எட்ட வேண்டிய தேவைப்பாட்டில் இருக்கிறது.கல்வியில் நிலவி வரும் பேதங்கள் கழையப்பட்டு வளங்கள் சமமாக பகிரப்பட வேண்டும்.நகர் புற பாடசாலைகள் போலவே கிராமப் புற பாடசாலைகளும் ஒரு சேர அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.இலவசக் கல்விக்கு புது யுகத்திற்கேற்ற தேவைப்பாட்டையே ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு பிரபஞ்சம் ஊடாக முன்னெடுத்து வருகிறது.இங்கு அரசியல் முன்னெடுக்கப்படவில்லை.

வாக்களிக்க முடியாத மாணவச் சமூகத்திற்கு எதிர்கால விடியலுக்கான வாயிலயே இதன் மூலம் திறந்து விட முயற்சிக்கிறோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.