(வாஸ் கூஞ்ஞ)
மன்னார் மாவட்டத்தில் 76வது சுதந்திரத் தினம் மக்கள் மத்தியில் உணர்வுகள் சிறப்புக்கள் காணப்படாத போதும் இத்தினம் மன்னார் மாவட்ட செயலகத்தில் மிக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
மன்னார் மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இத்தின விழாவானது மன்னார் பாலத்திலிருந்து மன்னார் மாவட்ட செயலகத்துக்கு பொலிஸ் , பாடசாலை மாணவர்களின் பாண்ட் இசையுடன் சுதந்திர தின அணிவகுப்புக்கள் இடம்பெற்றன.
இவ் அணிவகுப்பை அரசாங்க அதிபர் உட்பட முப்படைத் தளபதிகளும் இதற்கென பாலத்துக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த விஷேட மேடையிலிருந்து ஏற்றுக் கொண்டனர்
மன்னார் மாவட்ட செயலகத்தில் தேசியக் கொடி எற்றப்பட்டு இரு மொழிகளிலும் தேசியக் கீதம் இசைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்தவர்களுக்கான அக வணக்கம் செலுத்தப்பட்டது.
கலந்து கொண்ட முப்படை தளபதிகளுடன் அரசாங்க அதிபர் சமாதான நல்லுறவு வேண்டி புறாக்கள் பறக்கவிடப்பட்ன.
அத்துடன்; மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் 76 வது சுதந்திர தின பலூனை பறக்கவிட்டார்.
நான்கு மதங்களின் மதத் தலைவர்கள் ஆசியுரையை வழங்கியதைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் சுதந்திரத் தின உரையை ஆற்றினார்.
இறுதியில் மன்னார் மாவட்ட செயலக வளாகதத்pல் மரம் நடுகையும் இடம்பெற்றது.
இது இவ்வாறு இருக்க மன்னார் மாவட்டத்தில் ஓரிரு கடைகள் மற்றும் வாகனங்களில் மட்டுமே தேசியக் கொடி பறக்கவிடப்பட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.