மட்டக்களப்பு விவசாய அமைப்பினர் இராஜாங்க அமைச்சருடன் விசேட கலந்துரையாடல்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்ட விவசாய சம்மேளன உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடல் மேற்கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் ஏற்பாட்டில்  மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (02) திகதி இடம் பெற்றது.

இதன் போது விவசாய அமைப்பினர்  நெல்லிற்கான உத்தரவாத விலை இன்மையினால் தாம் பாதிக்கப்பட்டதை இதன் போது சுட்டிக்காட்டியதுடன் விவசாய நடவடிக்கை மேற்கொள்ளும் போது போக்குவரத்துக்கான வீதிகளை தரமுயர்த்தி தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவாசய பயிர்ச் செய்கைகளுக்குரிய நஷ்டஈடுகளை பெற்றுக் கொள்வதற்கு ஆவணம் செய்ய வேண்டும் என  வேண்டு கோள் விடுத்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் பின் தங்கிய பிரதேசமான  மண்முனை மேற்கு நரிப்புள் தோட்டத்த்தில் இருந்து இலுப்படிச்சேனை வரை புதிய பாலம் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய நிர்ப்பாசன பணிப்பாளர் என். நாகரெத்தினம் மற்றும் உயர் அதிகாரிகள்  விவசாய அமைப்பினர் என பலர் கலந்து கொண்டனர்.