எமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக நாம் நம்பிக்கையுடன் பயணிக்க வேண்டும் – இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்.

  (எஸ்.எஸ்.அமிர்தகழியான்)  நமது நாட்டில் தற்போது நம்பிக்கை கீற்று உருவாகியுள்ளது இயற்கை அனர்த்தங்களுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டியுள்ள போது தற்போது பொருளாதார அச்சத்தையும் எதிர்நோக்கி இருக்கின்றோம்,  கிராம மட்டத்தில் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது அதற்கு நாம் பிள்ளைகளை நம்பிக்கையுடன் வளர்க்கும் போது தான் எமது நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி அடையும் அதற்கு அனைவரும் பாடுபட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவ.சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய கிராம பகுதிகளில் போஷாக்கு மட்டம் என்பது மிக முக்கியம் ஒரு ஆரோக்கியமான குழந்தை பிரசவத்திற்கு போஷாக் என்பது மிக முக்கியமானதாகும், குழந்தைகள் ஐந்தாம் ஆண்டில் புத்தி கூர்மையாக இருக்கும்போதுதான் அவர்களால் புலமைப்  பரிட்சையில் சித்தி அடைய முடியும்.மனிதனின் வாழ்வில்  ஆரோக்கியத்திற்கு நிகராக ஒழுக்கம் இருக்க வேண்டும் அதேபோன்று சேமிப்பு என்பது மிக முக்கியம் நமது நாட்டில் தற்போது நம்பிக்கை கீற்று உருவாகியுள்ளது எமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக நாம் நம்பிக்கையுடன் பயணிக்க வேண்டியுள்ளது, அதற்காக கிராம மட்டத்தில் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதற்கு நாம் பிள்ளைகளை நம்பிக்கையுடன் வளர்க்கும் போது தான் எமது நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி அடையும் அதற்கு அனைவரும் பாடுபட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்று மட்டக்களப்பு வவுணதீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் மேற்கண்டவாறு கருத்தை தெரிவித்துள்ளார்.