(க.ருத்திரன்) ‘உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்’ என்ற தொணிப் பொருளில் வாழைச்சேனை லயன்ஸ் கழகம் ஏற்பாடு செய்து நடாத்திய இரத்ததான முகாம் கோறளைப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் இன்று-31 இடம்பெற்றது.இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம், கலந்து கொண்டார்.
அதிதிகளாக முன்னாள் லயன்ஸ் கழகத் தலைவர்களான க.இராஜகோபால்,கா.கணபதிப்பிள்ளை ஆகியோர்கள் சமூக செயற்பாட்டாளரும் போதனையாளருமான ஜோசப் சிவில்ராஜ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பாளர்,தாதியர்கள்,லயன்ஸ் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.இதன்போது பெருமளவான இரத்தம் வழங்கும் நன்கொடையாளர்கள்,பொலிசார் என பலரும் இரத்ததானம் வழங்கினார்கள்