யானையின் தாக்குதலுக்குள்ளாகி குடும்பப் பெண் பலி.

(க.ருத்திரன்)  கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகநேரியில் 31 அதிகாலை காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.இவர் குடா முனைக் கல் வாகநேரியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின தாயான அப்புசிங்கம் சாந்தினி வயது-43 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இன்று அதிகாலை  காலைக் கடனுக்காக அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றவரை பற்றைக்காட்டுக்குள் மறைந்திருந்த யானை துரத்தி தாக்கியுள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனம்.சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு மரண விசாரணையின் பின்னர் உறவிணர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கையினை பொலிசார் மெற்கொண்டிருந்தனர்.கோறளைப்பற்று திடிர் மரண விசாரணi அதிகாரி வ.ரமேஸ்ஆனந்தன் மரண விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.