கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் முயற்சியினால் முதல் கட்டமாக மண்முனை மேற்கு பிரதேசத்தினைச் சேர்ந்த சுமார் 07 பயனாளிகளுக்கான உபகரணங்கள் இன்று இராஜாங்க அமைச்சரின் பங்குபற்றுதலுடன் வழங்கப்பட்டன.இதன்போது குறித்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான வேலி கம்பிகள் மற்றும் விவசாய நீர்ப்பாசனத்திற்கான குழாய்கள், wheel barrow ஆகியன பயனாளிகளிடம் பகிர்ந்தளிக்கப்பட்டன.
பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே.ஜே.முரளீதரன், மாவட்ட செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் டி. நிமல்ராஜ், மண்முனை மேற்கு உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், மேலும் பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ். சபேசன் உட்பட அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.