(ஹஸ்பர் ஏ.எச்) பிறப்பு,இறப்பு மற்றும் திருமண பதிவுகள் தொடர்பான நடமாடும் சேவை தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இடம் பெறவுள்ளது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கமைய “புதிய கிராமம்- புதியநாடு”எனும் தொனிப் பொருளின் கீழ் இடம் பெறவுள்ள இவ் நடமாடும் சேவையானது 2024.02.08 ஆந் திகதி அன்று தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை இடம் பெறவுள்ளது. இதில் பிறப்பு,இறப்பு,திருமண பதிவுச் சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்காக சான்றிதழ்களை பெற்றுக் கொடுத்தல் மற்றும் தேசிய அடையாள அட்டை சிக்கல்களை தீர்த்தல்,காணி பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெறல் என பல சேவைகளை பொது மக்கள் அன்றைய தினம் பெற்றுக் கொள்ள முடியும் .எனவே பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
—