மொறவெவ பிரதேச செயலகத்தில் பால்மா பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு.

(ஹஸ்பர் ஏ.எச்) திருகோணமலை மாவட்டம் மொறவெவ பிரதேச செயலகத்தில் பால் மா பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.பன்குளம் இராணுவ அதிகாரி லெ.கேனல்.பிலிமத்தலாவே (6SLAC) அவர்களின் அனுசரணையுடன் பிரதிப்பணிப்பாளர் (திட்டமிடல்) ம.துஷ்யந்தன் அவர்களின் வழிகாட்டலுக்கிணங்க பிரதேச செயலாளர் ஆ.நவேஸ்வரன் தலைமையில் மொறவெவ பிரதேச செயலகபிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான பால்மா பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வானது நேற்று (30)  பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
பிள்ளைகளின் ஊட்டத் சத்தை அதிகரிக்கவும் ஆரோக்கியமான உடல் உள வளர்ச்சிக்கு ஒரு உறுதுணையாகவும் இது அமைகிறது.
இந் நிகழ்வில் மொறவெவ உதவி பிரதேச செயலாளர் கே.சத்தியப்ரியா, மொறவெவ பிரதேச செயலக கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.