துறைசார் உத்தியோகத்தர்களுடன் சமூக மட்ட பிரச்சினைகள் தொடர்பான கலந்தாய்வு.

(ஹஸ்பர் ஏ.எச்) திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகப் பகுதியில் காணப்படும் சமூக மட்ட பிரச்சினைகள் தொடர்பான கலந்தாய்வு திருகோணமலை விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தில்(29) இடம் பெற்றது.
இதில் மூதூர்,தம்பலகாமம்,திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பகுதிகளை உள்ளடக்கிய துறை சார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட வட்டமேசை கலந்துரையாடல் ஒதுக்கப்பட்ட சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள்,சிறுவர் இளைஞர்கள்,சமூக நல்லிணக்கம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை அடையாளங் கண்டு அதனை தீர்ப்பதற்கான வழி முறைகளை கையாள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடலை திருகோணமலை விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் ஏற்பாடு செய்திருந்தது.
மேலும் மாவட்ட பெண்கள் சமாசம்,அமரா பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் ஒன்றியம், Trincomalee Active Citizen Group,மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்புக்களும் கலந்து கொண்டனர். இதில் தைப் பொங்கல் தின நிகழ்வும் வெகு விமர்சையாக இடம் பெற்றது.
குறித்த கலந்துரையாடலை விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் திட்ட இணைப்பாளர் அபிவர்ணா வர்ணகுலசிங்கம் நெறிப்படுத்தினார்.