மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய கொடியேற்றம் – 2024.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்றதும் தொன்மை வாய்ந்ததுமான மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலயத்தின் 2024 ஆண்டிற்கான வருடாந்த திருவிழா (26) திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து நவநாட்கால திருவிழாக்கள் இடம்பெற்று, இறுதித் திருவிழாவான கொடி இறக்க திருவிழா எதிர்வரும் 04.02.2024 திகதி காலை இடம் பெற உள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பழமை வாய்ந்த இவ்வாலயம் தனது 400 வது ஆண்டு பெருவிழாவை இவ்வருடம் சிறப்பாக கொண்டா டுகின்றது.

ஆலய பங்குத்தந்தை ஜூலியன் பிரான்சிஸ் தலைமையில் 400 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆலயம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது.

ஆலயத்தின் பெருவிழாவை முன்னிட்டு எதிர்வரும் 02.02.2024 திகதி காலை ஆலயத்தின் 9 வட்டாரங்களைச் சேர்ந்த 400 சிறுவர்களுக்கு ஞானஸ்தான வழங்கப்படவுள்ளதுடன், மறுநாள் 03.02.2024 திகதி மாலை இவ் வருடத்திற்கான திருவிழாவின் வட்டார சுற்று பிரகார ஊர்வலம் ஆலய பங்கு மக்களால் முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024-01-28 at 20.29.05 (1).jpegWhatsApp Image 2024-01-28 at 20.29.05.jpegWhatsApp Image 2024-01-28 at 20.29.04.jpegWhatsApp Image 2024-01-28 at 20.29.04 (1).jpegWhatsApp Image 2024-01-28 at 20.29.03 (1).jpegWhatsApp Image 2024-01-28 at 20.29.03.jpegWhatsApp Image 2024-01-28 at 20.29.02 (1).jpegWhatsApp Image 2024-01-28 at 20.29.02.jpegWhatsApp Image 2024-01-28 at 20.29.01.jpeg