வாஸ் கூஞ்ஞ)
மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் பாரிய களியமண் அகழ்வு மற்றும் உயர்மின்வலு காற்றாடிகள் அமைக்கும் திட்டங்களினாலும் மன்னார் மக்களின் குறிப்பாக மன்னார் தீவு மக்களின் இருப்பு , வாழ்வாதாரம் அழிவு , சட்டவிரோத காணி அபகரிப்பு . வாழ்வு தரும் மரங்கள் அழிப்பு போன்றவற்றால் மன்னார் தீவை கடலுக்குள் அமிழ போவதையும்
மற்றும் ஏனைய சட்டவிரோத செயற்பாடுகள் ஆகியவற்றில் இருந்து மன்னாரின் சுற்று சூழலை அழிப்பதுமான திட்டத்தை உடன் கைவிட்டு மக்கள் நலமாகவும் மகிழ்வுடன் வாழவும் நாட்டின் வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி மன்னார் நகரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இப் போராட்டத்தின்போது ஆண் பெண் என இருபாலாரும் கைகளில் பதாதைகள் ஏற்தியவாறு கோஷங்கள் இட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்;
பதாதைகளில் ‘மனித உயிர்களை காவு கொள்ளுகின்ற மண் அகழ்வு காற்றாலை நடவடிக்கைக்கு காணிகளை விற்காதே’ .
‘மண் அகழ்வை நிறுத்தாவிடில் நன்னீர் மாசடைவதுடன் உப்புத் தன்மையும் அதிகரிக்கும்’
‘மன்னாரின் சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் ஒன்றினைவோம்’
‘கனியவள மண் அகழ்வு மன்னார் மக்களின் வாழ்வாரத்தை அழித்து விடும்’ போன்ற வாசகங்கள் காணப்பட்டன.
வெள்ளிக்கிழமை (26) காலை மன்னார் பிரதான பாலத்தில் தொடங்கி மாவட்ட செயலகம் முன்பாக ஒரு சில மணி நேரம் இக் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் எற்பாட்டில் நடைபெற்ற இவ் கனயீர்ப்பு போராட்டத்தில் மதத் தலைவர்கள் , வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் , வடக்கு தெற்கு முக்கியஸ்தர்கள் உட்பட பலர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட வடக்கு தெற்கு முக்கியஸ்தர்கள் இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க மத்தலைவர்கள் அரச சார்பற்ற அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் என பலரும் உரையாற்றினர்.
இதைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட செயலகத்துக்கு சென்ற போராட்டக்காரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்குமாறு மகஜர் ஒன்றையும் மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) அவர்களிடம் கையளிக்கப்பட்டது.