துறைநீலாவனையில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.

(இ.சுதா)

துறைநீலாவணை மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் சமூகத்தினரின் ஏற்பாட்டில் கிராமத்தில் தாய் ,தந்தையினை இழந்த வறுமைக் கோட்டின் கீழ் பல சிரமங்களுக்கு மத்தியில் கற்றல் செயற்பாட்டினை முன்னெடுக்கின்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (25) காலை 9.30 மணியளவில் பாடசாலையின் பழைய மாணவரும் தொழில்நுட்ப உத்தியோகத்தருமான திரு.வ. மதிகேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

பழைய மாணவர் சமூகத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினரதும், வீரமுனை காயத்திரி அறக்கட்ளை நிறுவனத்தின் அனுசரனையுடனும் குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் கட்சியின் அமைப்பாளரும் பிரதி அதிபருமாகிய  எஸ்.சசிதரன்,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.சுதாகரன் ,துறைநீலாவணை மகாவித்தியாலயத்தின் முதல்வர் ரீ.ஈஸ்வரன் ,பிரதி அதிபர் இ.லிங்கநாதன் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் பு.சக்தன் உட்பட பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள் ,வீரமுனை காயத்திரி அறக்கட்டளை நிறுவனத்தின் பிரதிநிதி.ச.யுனேசா, மாணவர்கள் ,பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.