சங்கமன்கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலய புனர் நிர்மாண அடிக்கல் நடும் நிகழ்வு

வி.சுகிர்தகுமார் 

 கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் அமையப்பெற்ற  கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நாகர் குல சங்கமன் எனும் சிற்றரசனால் நிர்மாணிக்கப்பட்ட பண்டைய வரலாற்றுத் தொன்மை மிக்க திருக்கோவில் பிரதே செயலகத்திற்குட்பட்ட தாண்டியடி, சங்கமன்கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலய புனர் நிர்மாண அடிக்கல் நடும் நிகழ்வானது இன்று(24) காலை சுபநேரத்தில் இறை ஆசியுடன் இடம்பெற்றது.
சிவபூமியாம் என திருமூலரால் போற்றப்பட்டு வரும் இலங்காபுரியில் பஞ்பூதங்களின் ஆசீர் வாதத்துடன் திகழும் இவ்ஆலயத்தின் அடிக்கல் நடும் நிகழ்வு பக்தர்களின் அரோகரா கோஷங்களுடனான வேண்டுதலுக்கு மத்தியில் காலை 9.40 முதல் 10.50 வரையான சுப வேளையில் சாம ஸ்ரீP தேசமான்ய சிவாச்சாரியார் திலகம் அகோர சிவாச்சாரியார் சிவப்பிரம்ம ஸ்ரீP சி.கு.கணேஸ்சமூர்த்திஸ்வர குருக்கள் தலைமையிலான குருமார்களின் வேதமந்திரங்களுடன் ஆரம்பமானது.
ஆலய நிர்;வாக சபையின் தலைவர் த.முருகானந்தராசா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் ஆலய செயலாளர் வா.குணாளன் பொருளாளர் லிங்கநாதன் மற்றும் பிரதேச செயலக கலாச்சார அபிவிருத்தி உத்தியோத்தர் நிஷாந்தினி இந்து அமைப்புக்களின் தலைவர்கள் ஆலய தலைவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் யாக பூஜை இடம்பெற்றதுடன் ஆலயத்தலைவரினால் பிரதான அடிகல் எடுத்துச் செல்லப்பட்டு சிவப்பிரம்ம ஸ்ரீ சி.கு.கணேஸ்சமூர்த்திஸ்வர குருக்கள் அவர்களினால் நடப்பட்டதுடன் கலந்து கொண்ட அனைவரும் அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்வின் ஆசி உரையினை சாம ஸ்ரீ தேசகீர்த்தி ஈசான  சிவாச்சாரியார் சிவப்பிரம்ம ஸ்ரீ .கணேச திவிசாந்த குருக்கள் வழங்கியதுடன் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் மற்றும் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் ஆகியோர் ஆசியுரைகளை வழங்கினர்.
மிகவும் பழமை வாய்ந்த இவ்வாலயம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் பழமையான ஆலயம் சிதைவடைந்ததன் காரணமாகவே நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இதற்கு உள்நாட்டு வெளிநாட்டு உறவுகள் கைகொடுத்து உதவ முன்வரவேண்டும் எனவும் செயலாளர் வா.குணாளன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.