க.ருத்திரன்
‘சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை’ என்ற தொணிப் பொருளில் பொங்கல் விழாவும் கமநல புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வும் வந்தாறுமுலை கமநலசேவைகள் நிலையத்தில் நேற்று புதன் கிழமை -24 நடைபெற்றது.
கமநல அபிவிருத்தி பிரதேச உத்தியோகத்தர் எம்.எ.ரஷீத் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வானது கமக்கார அமைப்புக்களின் மாவட்ட அதிகாரசபை தலைவர் எஸ்.சந்திரமோகன் தலைமையிலான நிர்வாகத்தினால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டிருந்தது.
இன்றைய பொங்கல் நிகழ்வானது வந்தாறுமுலை கமல சேவைகள் நிலையத்திற்குட்பட்ட 24 விவசாய அமைப்புக்கள் ஒன்றிணைந்து பொங்கலிட்டு சூரிய பெருமானுக்கு தங்களது நன்றியை செலுத்தினர்.அதிதிகள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு மங்களவிளகேற்றல் நிகழ்வும் பாரம்பரிய கலை, பண்பாட்டு,கலாச்சார நிகழ்வும் நடைபெற்றது.
இதன்போது பெண்களுக்கான விளையாட்டு நிகழ்வாக கிடுகு பின்னுதல்,தேங்காய் துருவுதல்,மற்றும் ஆண்கள் சாயமுட்டி உடைத்தல் போன்ற விளையாட்டு நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.நிகழ்வின் இறுதியில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் கே.ஜகன்நாத் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அதிதிகளாக மட்டக்களப்பு மத்திய நீர்ப்;பாசன பணிப்பாளர் என்.நாகரெத்தினம்.செங்கலடி உறுகாமம் பிரதேச நீர்பாசன பொறியியலாளர் எ.விஷ்ணுருபன்,மாகாண நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் எஸ்.எம்.இர்ஷாத்,மட்டக்களப்பு தேசிய உரச்செயலக உதவிப்பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜீன்,விவசாயப் போதனாசிரியர் பி.ரவிவர்மன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.