தற்போது நாங்கள் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை நிலம் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம். மயிலத்தமடு மாதவனையில் சட்டவிரோதமாக குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றது என்பது யாவரும் அறிந்த விடயமே ஆகும். அரசாங்கம் நமது வடக்கு, கிழக்கில் காணப்படும் மக்களின் விகிதாசாரத்தை மாற்றுவதற்காகவும் பெரும்பான்மை சமூகத்தினரை மேலும் அதிகரிக்க சட்ட விரோத குடியேற்ற வேலை திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது என அறிவித்தால் அதற்கு கூட Online Safety Bill சட்ட மூலம் சட்ட விரோதமான செயற்பாடு என மேற்கோள் காட்டும். ஜனாதிபதி அவருடைய பினாமிகளாக ஐந்து பேரை நியமிப்பதை அரசியல் Constitution Council அனுமதித்தாலும் கூட இந்த ஐந்து பேர் மாத்திரம் இனி வரும் காலங்களில் எவை சரியான கருத்துக்கள், எவை பிழையான கருத்துக்கள் என கூறும் அளவிற்கு மாறிவிடலாம். இன்று ஒரு அமைச்சர் இருக்கலாம் நாளை இன்னும் ஒருவர் மாறலாம். மாற்றமடையும் அமைச்சர்களுடைய செயல்பாடுகள் எங்களுக்கு தெரியாது. அமைச்சர் விரும்பினால் திறமை உள்ளவர் ஒருவரை நியமித்து நாளைய தினம் அவருடைய தொலைபேசி மற்றும் மடிக்கணினி என்பவற்றை எடுத்து என்ன இருக்கிறது என்பதை ஒரு நீதிமன்றத்தின் உத்தரவின்றி மேற்கொள்ளலாம்.