வீரமுனை வழிபாட்டுப்பிள்ளையார் ஆலய தைப்பூச புதிர் எடுத்தல் பாரம்பரிய நிகழ்வு!

 வி.ரி. சகாதேவராஜா)
தைப்பூச திருநன்னாளில் பாரம்பரிய புதிர் எடுத்தல் நிகழ்வு வீரமுனை  ஸ்ரீ வழிபாட்டுப்பிள்ளையார் ஆலயத்தினால் இன்று (25) வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
 வீரமுனை கிராமத்தில் தமிழ் பாரம்பரிய நிகழ்வான வயல் வெளியில் நெற்கதிர் அறுத்தல் நிகழ்வானது ஆலய பிரதமகுரு சிவ ஸ்ரீ கிஷோவேந்தன் சர்மா மற்றும் சிவ ஸ்ரீ முரளிதரன் ஜயா தலைமையில்  ஆலய பரிபாலனசபையினர் ஒத்துழைப்புடன் வீரச்சோலை வயல் வெளிக்குச் சென்று இனிதே நடைபெற்றது.
அங்கு காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலும் கலந்து கொண்டார்.