மட்டு இருதயபுரத்தில் 13 நாள் பெண்குழந்தை பால் பிறக்கேறி உயிரிழப்பு.

(கனகராசா சரவணன்)  மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள இருதயபுரம் பகுதியில் பால் பிரக்கேறி 13 நாள் பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம்  திங்கட்கிழமை (22) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனா.

இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த 13 நாட்கள் கொண்ட அஜித்குமார் அனோஜினி என்ற பெண் பிள்ளேயே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த குழந்தை பிறந்து 13 நாட்களாகிய நிலையில் குழந்தைக்கு சம்பவதினமான நேற்று மாலை தாயார் பாலை பருக்கிய நிலையில் குழந்தை பால்பிரக்கேறி உயிரிழந்துள்ளது

இதனையடுத்து குழந்தையின் தாயாரிடம் மேற்கொண்ட விசாணையின் போது அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் சடலத்தை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை;காக ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (23)  பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய போது குழந்தைக்கு பால் பிரக்கேறி உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்தாகவும் சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனா.;