மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல் விழா.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)  மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் தைப்பொங்கல் விழாவானது பிரதேச செயலக முற்றத்தில் இடம் பெற்றது.

பிரதேச செயலகத்தில் உள்ள இராஜ கணபதி ஆலயத்தில் மிக விமர்சையாக புதிர் எடுக்கும் நிகழ்வுடன் ஆரம்பமாகியது.இதன் போது பிரதேச செயலகத்தைச் சேர்ந்த பல கிளைகளினால் ஒன்பதுபொங்கல் பானை வைத்து சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு வழிபாடு செய்யப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில்  உத்தியோகத்தர்களினால் பாரம்பரியங்களை பிரதிபளிக்கும் பல்வேறு கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், நிருவாக  கிராம உத்தியோகத்தர், சமூர்த்தி தலைமை முகாமையாளர் மற்றும் பல உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.