(கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்கான பாடுமீன் நகர்சேர் கடுகதி புகையிரத வண்டியிலுள்ள சிற்றுண்டிச்சாலையில் உணவு பாதுகாப்பு இல்லாமல் வியாபாரம் செய்தமை தொடர்பாக அதன் உரிமையாளருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கையடுத்து எதிர்வரும் 8ம் திகதி வரைக்கும் தற்காலிகமாக சிற்றுண்டிச்சாலையை மூடுமாறு நேற்று செவ்வாய்கிழமை (23) நீதவான் உத்தரவிட்டு கட்டளை பிறப்பித்தார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தலமையில் த.மிதுன்ராஜ், சோதிராஜா அமிர்தன், சோமசுந்தரம் யசோதன் ஆகியோர் கொண்ட பொது சுகாதார பரிசோதகர்கள் கொண்ட குழுவினர் திங்கட்கிழமை (22) இரவு நகரிலுள்ள பிரபல ஹோட்டல்கள் மற்றும் புகையிரத வண்டி சிற்றுண்டிச்சாலை, போன்றவற்றை திடீர் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன் போது பல ஹோட்டல்களில் மனித பாவனைக்கு உதவாத பல பொருட்கள் மீட்டு அழித்ததுடன் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துடன் சில ஹோட்டல்களை திருத்த வேலைகளை 3 நாட்களில் திருத்தி அமைப்பதற்காக இழுத்து பூட்டினர்.
இந்த நிலையில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி பிரயாணிக்க இருந்த பாடுமீன் நகர்சேர் கடுகதி புகையிரத வண்டியிலுள்ள சிற்றுண்டிச்சாலை சோதனையிட்ட போது அங்கு பாதுகாப்பற்ற முறையில் உணவு வியாபாரம் செய்தமை மற்றும் சிற்றுண்டிச்சாலையில் துப்பரவு இல்லாமை போன்றவற்றை கண்டறிந்து சிற்றுண்டிச்சாலை உரிமையாளருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நேற்று செவ்வாய்கிழமை (23) வழக்கு தாக்கல் செய்ததையடுத்து நீதவான் குறித்த புகையிரத வண்டி சிறுண்டிச்சாலையை எதிர்வரும் 8ம் திகதிவரை 14 நாட்களுக்கு மூடுமாறு கட்டளை பிறப்பித்தார்.
இதனையடுத்து நீதிமன்ற கட்டளையை பாடுமீன் நகர்சேர் கடுகதி புகையிரத வண்டியில் ஓட்டுவதற்காக இரவு 7 மணிக்கு மட்டு புகையிரத நிலையத்தைக்கு சென்ற போது கொழும்பு நோக்கி பிரயாணிக்க இருந்த மற்றும் ஒரு புகையிரத வண்டியின் சிறு;றுண்டிச்சாலையை சோதனையிட்டபோது அதில் கடமையாற்று பவர்கள் மருத்துவ சான்று பெறாது கடமையாற்றுவது மற்றும் உணவு பாதுகாப்பற்ற முறையில் வியாபாரம் செய்தமை கண்டறிந்து அந்த சிற்றுண்டிச்சாலைக்கு எதிராக வழக்கு தாக்கல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தெரிவித்தார்.