உழவர் திருநாள் விழா.

(அபு அலா ) உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையும், திருகோணமலை நகராட்சி மன்ற பொதுநூலகமும் இணைந்து நடாத்தும் உழவர் திருநாள் விழா திருகோணமலை நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 27 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் தலைவர் சுந்தரம் சிவபாலன் தலைமையில் இடம்பெறவுள்ள
உழவர் திருநாள் விழாவுக்கு முதன்மை அதிதியாக உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் சர்வதேசத் தலைவர் எந்திரி த.மகிபாதேவனும், சிறப்பு அதிதியாக திருகோணமலை நகராட்சி மன்ற செயலாளர் வெ.இராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
காளி கோவில் தேவஸ்தான வேதாகமமாமணி பிரம்மஸ்ரீ சோ.ரவிச்சந்திரக் குருக்களும்,
திருகோணமலை மறைமாவட்ட ஆயர் இமானுவல் ஆண்டகை கலாநிதி கிறிஸ்ரியன் நோயல் ஆகியோரினால் ஆன்மீக அருளுரையாளர்கள் நிகழ்த்தி வைக்கப்படவுள்ளது.
வரவேற்புரையை நூலக உதவியாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அ.அச்சுதனும்,
சிறப்புரையை ஓய்வுநிலை அதிபர் சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமலை நவமும், உழவர் நடனத்தை பாரதி தமிழ் வித்தியாலய மாணவர்களினாலும் நிகழ்த்தி வைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.