திருகோணமலையில் ஊடகவியலாளர்களுக்கான ஒன்று கூடல்

ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஒன்று கூடல் வைபவம் ஒன்று இன்று (21)திருகோணமலை சர்வோதய மண்டபத்தில் இடம் பெற்றது.
இதனை அகம் மனிதாபிமான வளநிலையம் (AHRC)ஏற்பாடு செய்திருந்தது.
இக்கட்டான கால சூழ் நிலையில் பணியாற்றிய சிரேஷ்ட ஊடகர்களின் அனுபவப் பகிர்வும் இதன் போது இடம் பெற்றதுடன் கடந்த யுத்த கால கட்டத்தில் திறம்பட பணியாற்றிய ஊடகவியலாளர்களின் பணி பற்றியும் பாராட்டப்பட்டு பேசப்பட்டது. ஊடகவியலாளர்களுக்கான 2024ம் ஆண்டுக்கான நாட்காட்டியும் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் அகம் மனிதாபிமான வளநிலையத்தின் இணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா உட்பட சுமார் 30க்கும் உட்பட்ட பிரதேச ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.