( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை மாநகர் சந்தான ஈஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 17.01.2024 புதன் கிரியைகள் ஆரம்பமாகின.
18.01.2024 வியாழன்,19வெள்ளி ,20 சனி ஆகிய மூன்று தினங்கள் எண்ணைய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது. பெருந்திரளான பக்தர்கள் கொட்டும் மழைக்கு மத்தியில் எண்ணெய் காப்பு சாத்தினர்.
இன்று 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை மஹா கும்பாபிஷேகம் ஆலய பரிபாலன சபை தலைவர் வே.செவ்வேள் தலைமையில் நடைபெற்றது.




