மட்டக்களப்பில் தமிழோடு விளையாடு நிகழ்வு!!

தமிழோடு விளையாடு நிகழ்வு
மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெற்றது.

மட்டக்களப்பில் தமிழோடு விளையாடு நிகழ்வானது வாகை அம்மையாரின் தலைமையில் ஆணி வேர் சிறுதானிய உற்பத்திகளும் இணைந்து தமிழ் ஒபேரா நிருவனத்தின் ஏற்பாட்டில் கல்லடி சிறுவர் பூங்காவில்  19ம் திகதி இடம் பெற்றது.

மக்களிடையே கலப்பற்ற தூய தமிழில் உரையாடுவதை  மேம்படுத்தும் நோக்கில் தமிழோடு விளையாடு நிகழ்வு  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளின் இந்நிகழ்வு இடம் பெறவுள்ளது.

சிறுவர்களிடையே வேற்று மொழி கலப்பின்றி செந்தமிழில் உரையாடுவதை  ஊக்கப்படுத்தும் முகமாக தமிழோடு விளையாடு நிகழ்வு முன்னேடுக்கப்படவுள்ளது.

இந் நிகழ்வில் சிறுவர்கள் மற்றும் பெற்றோர் ஆர்வத்தோடு பங்குபற்றியிருந்தனர்.

உள்ளூர் உற்பத்தி முயற்யாளர்களான ஆணிவேர் சிறுதானிய உணவு உற்பத்தி நிலையத்தினால் பாரம்பரிய ஆரோக்கியமான உணவுகளை உற்பத்தி செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.