இலங்கைத் தமிழர்களுக்கு நூல்களை அன்பளிப்புச் செய்த இனிய நந்தவனம்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள கோட்டைக்கல்லாறு எனும் கிராமத்தில் இயங்கும் நூலகத்துக்கு கடந்த வருடம் சுவிஷ் தமிழ் இலக்கியச் சங்கத் தலைவர் கல்லாறு சதீஷின் வேண்டுகோளில் வருகை தந்த இனிய நந்தவனம் ஆசிரியர் சந்திரசேகரம் ,கல்லாறு சதீஷின் வேண்டுகோளினை ஏற்று 1000 தமிழ் நூல்களை இந்த நூலகத்துக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
புலம்பெயர் படைப்பாளிகள்,மலேசியப் படைப்பாளர்கள் உட்பட பலர் எழுதிய பெறுமதி மிக்க நூல்களை ஒரு புத்தகப் பதிப்பாளர் அன்பளிப்புச் செய்வது சாதாரண விடயமல்ல,சுமார் 2 இலட்சங்கள் இந்திய ரூபாய்கள் பெறுமதியான இந்த நூல்களைத் திருச்சியிலிருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கும் பணியினையும் நந்தவனம் சந்திரசேகரன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
சென்னையிலிருந்நு இந்த நூல்கள் கல்லாறு சதீஷின் திட்டமிடலின் படி கோட்டைக்கல்லாறு நூலகத்துக்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்படும்.