களுதாவளை பிரதேச சபையில் பொங்கல் விழா.

(எருவில் துசி) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் பொங்கள் விழா இன்று(18) சிறப்பாக செயலாளர் சா.அறிவழகன் அவர்களின் தலைமையில் பிரதேச சபையில் நடைபெற்றது.

சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் விவசாயிகளால் கொண்டாடப்படும் இந்த விழாவினை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.