சபுகஸ்கந்த ஷோகன்ஜி சர்வதேச பாடசாலை மாணவன் கேம்பிரீஜ் தரம் 10 பரீட்சையில் சர்வதேச ரீதியில் 6 ஆம் இடம்

(அஸ்ஹர் இப்றாஹிம்)  சபுகஸ்கந்த ஷோகன்ஜி சர்வதேச பாடசாலை மாணவன் றியாதுல் இஸ்லாம் சர்வதேச ரீதியில் நடத்தப்படும் கேம்பிரீஜ் தரம் 10 பரீட்சையில் கணினி அறிவியல் பாடத்தில் அதிக புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
உலகம் முழுவதும் சுமார் 4 மில்லியன் மாணவர்கள் கலந்து கொண்ட மேற்படி பரீட்சையில் சர்வதேச ரீதியில் 6 ஆம் இடத்தையும், இலங்கை மாணவர்களுள் முதலாம் இடத்தையும், பிரஞ்சு மொழிப் பரீட்சையில் முதலாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளதாக பாடசாலை நிறைவேற்று அதிகாரி அம்பபாலி கிருராஜபதி தெரிவித்தார்.