தலைமன்னார் கடற்பரப்புக்குள் கைது செய்யப்பட்ட 18 இந்திய மீனவர்கள் 31 ந் திகதி வரை விளக்க மறியல்.

( வாஸ் கூஞ்ஞ)

இலங்கை மன்னார் கடற்பரப்புக்குள் இந்திய இலுவைப் படகுகள் அத்துமீறி நுழைந்து இறால் மீன் பிடியில் ஈடுபட்டபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் திங்கள் கிழமை (16) அன்று தலைமன்னார் கடற்பரப்புக்குள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது

சம்பவம் அன்று இந்திய இராமேஸ்வரப் பகுதியிலிருந்து இரு இந்திய இலுவைப் படகுகளின் மூலம் 18 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டபோது இலங்கை கடற்படையினரால் தலைமன்னார் கடற்பரப்புக்குள் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் படகுகளிலிருந்து பல ஆயிரக்கணக்கான குஞ்சு மீன்களளும் கைப்பற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இவர்களை தலைமன்னார் கடற்படையினர் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் புதன் கிழமை (17) மாலை முற்படுத்தினர்.

இவர்களை எதிர்வரும் 31.01.2024 வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு

ஏ.பிச்சை (வயது 43) , யஸ்ரின் (வயது 40) , இன்னாசை (வயது 38) , சதீஸ் (வயது 26) . எஸ்போ (வயத 27) , சாளின் (வயத 38) , ருபி (வயது 25) பாஷா (வயது 25) சவுPன் (வயது 32) , தன்சில் (வயது 77) . யோகேஸ் (வயது 39) , நியன்சன் (வயது 26 புனித சூசையப்பர் பட்டினம்) ஆNருhக்கியம் , இன்னாசி பினாஸ் . அந்தோனி அடிமை . அன்ரன்  இமோன் (வயது 39 சூசையப்பர் பட்டினம்)
ஏனையவர்கள் யாவரும் பாம்பன் பகுதிகளைச் சேர்ந்தவாகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது