(ஏ.எம்.ஆஷிப்)
அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் சேதமடைந்துள்ள வீதிகளை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்குமாறு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன பணிப்புரை விடுத்துள்ளார்.
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.எம். வீரசிங்கவின் அழைப்பையேற்று நேற்று அம்பாறைக்கு விஜயம் செய்த அமைச்சர் பந்துல குணவர்த்தன, சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்ப்பாசன குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் சேதமடைந்த வீதிகள், கால்வாய்கள் என்பவற்றை நேரடியாக சென்று பார்வையிட்ள்ளார்.