களுவாஞ்சிகுடியில் விபத்து ஒருவர் பலி.

(எருவில் துசி) சற்று முன்னர் களுவாஞ்சிகுடி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட  குறுக்கல்மடம் பிரதான வீதியில் இடம் பெற்ற கோர விபத்தில் மண்டூரை சேர்ந்த இளைஞன் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளதாகவும் அவருடன் சென்ற ஏனைய மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலீஸார் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.