நள்ளிரவில் காரைதீவுக்குள் புகுந்ததால் மக்கள் அல்லோல கல்லோலம்.

( வி.ரி.சகாதேவராஜா)  இங்கினியாகல சேனநாயக்கா சமுத்திரத்தின் அனைத்து வான் கதவுகளும்  திறக்கப்பட்டதால் நேற்று நள்ளிரவில் திடீரென  வெள்ளநீர் காரைதீவுக்குள் புகுந்தது .
மக்கள் பதறிஅலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள் . நிலைமை அல்லோல கல்லோலமானது.மக்கள் பீதியுடன் இடம் பெயர்ந்தனர்.
இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி அளவில் இந்த வெள்ள நீர் பிரதான வீதியை தாண்டி ஊருக்குள் பாய்ந்தது .
சுமார் 300 மீட்டர் தூரம் குளத்து நீர் நள்ளிரவில் வந்ததனால் மக்கள் பீதி அடைந்தார்கள் .
இங்கினியாகல குளம் உடைந்துவிட்டதோ என்ற நினைப்பிலே மக்கள் பீதியுடன் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள் .
அந்த கணத்தில் இருந்து மறுநாள் இன்று  வெள்ளிக்கிழமை  மக்கள் விழித்துக் கொண்டே இருக்கின்றார்கள்.
 வெள்ளிக்கிழமை வெயில் அடித்துக் கொண்டிருக்கின்றது. மழை இல்லை.
 மக்களின் வீடு வாசல் எல்லாம் வெள்ள நீர் தேங்கி காணப்படுகிறது.