புதிய பாராளுமன்ற உறுப்பினராக ஐக்கிய மக்கள் சக்தியின் நயண பிரியங்கர  வாசலதிலக சத்தியப்பிரமாணம்.

(அஸ்ஹர் இப்றாஹிம்) ஐக்கிய மக்கள் சக்தியின் நயண பிரியங்கர வாசலதிலக சபாநாயகர் முன்னிலையில் புதிய பாராளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து பதுளை மாவட்டத்தில் அடுத்தாக கூடுதலான வாக்குகளை நயண பிரியங்கர பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.