(ஏ.எல்.எம்.ஷினாஸ்) அம்பாறை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளநீர் பெருக்கெடுப்பு காரணமாக இலங்கை போக்குவரத்து கல்முனை பஸ் சாலை வளாகம் வெள்ளநீரினால் நிரம்பி வருகின்றது.
இதனால் பஸ் சாரதிகள் உட்பட இங்கு கடமையாற்றும் அதிகாரிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். எனினும் உரிய நேரத்துக்கு பஸ் சேவைகளை தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தொடர்ந்து வெள்ளநீர் பெருக்கெடுத்தால் கல்முனை பிரதான பஸ் சாலையில் பஸ் வண்டிகளை தரித்துவைக்க முடியாத நிலை ஏற்படும்.