காரைதீவு மாவடிப்பள்ளி பிரதான வீதியில் வெள்ளம் பாய்கிறது!! சிறிய வாகனங்கள் செல்ல தடை.

( வி.ரி.சகாதேவராஜா) கடந்த சில நாட்களாக பொழிந்த கனமழை மற்றும் சேனநாயக்கா சமுத்திரத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டதால் வந்த வெள்ளத்தால்
காரைதீவு  மாவடிப்பள்ளி அம்பாறை பிரதான வீதியில் இரு இடங்களில் வெள்ளம் பரவுகிறது.
இன்று (11)  வியாழக்கிழமை வாகனங்கள் சிரமத்திற்கு மத்தியில் பயணித்தன. வானம் இருண்டிருந்தது. மழை குறைந்து காணப்பட்டது.
சிறிய வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
காரைதீவு இராணுவ முகாம் ஊடாக  விபுலானந்தா கலாச்சார மண்டபத்திற்கு செல்லும் பிரதான வீதியில் வெள்ளம் பரவுகிறது. அங்கும் பயணிகள் சிரமத்திற்கு மத்தியில் பயணிக்கின்றனர்.
 காரைதீவு வெள்ளக் காடாக காட்சிளிக்கிறது.
குறிப்பாக கந்தசுவாமி ஆலய வளாகத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மக்கள் வெள்ளம் பாய்வதிலும் ஆர்வம் காட்டினார்கள்.
மேலும் காரைதீவிலுள்ள தாழ் நில பிரதேசங்களிலும் வயல் வெளிகளிலும் வெள்ளம் தேங்கி நிற்கிறது.
கடற்றொழில் மற்றும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.அதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.