( வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட வளத்தாப்பிட்டி சீர்பாத தேவி வித்தியாலயம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
சமகால கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இந்த இப் பாடசாலை பாதிக்கப்பட்டிருக்கிறது.
பாடசாலை அதிபர் ரி.சதானந்தா தகவல் தருகையில்.. பாடசாலை வளாகத்தில் மூன்றடி வெள்ளம் நிற்பதாகவும் வகுப்பறைகள் மற்றும் அலுவலகத்துக்குள்ளும் அந்த வெள்ளம் புகுந்துள்ளதால் ஆவணங்கள் சேதமடைந்திருந்தன. என்று குறிப்பிட்டார்.
வலயக்கல்விப் பணிமனைக்கும் பிரதேச செயலகத்திற்கும் பாதிப்பு தொடர்பாக அறிவித்திருக்கின்றார்
இதேவேளை அருகிலுள்ள மாணிக்கப்பிள்ளையார் ஆலயமும் வெள்ளத்தில் அமிழ்ந்துள்ளது.