( வாஸ் கூஞ்ஞ) மன்னார் முசலி பிரதேச செயலளார் பிரிவில் உள்ள மரிச்சுக்கட்டி பாலக்குளி பகுதியில் காட்டுக்குள் சென்ற ஆறு பேரில் அதில் ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி இறந்து விட்டதாகவும் ஏனைய இரண்டு பேரைத் தேடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
மன்னார் முசலி பிரதேச செயலளார் பிரிவில் உள்ள மரிச்சுக்கட்டி மற்றும் பாலக்குளி பகுதியில் வசிக்கும் ஆறுபேர் திங்கட்கிழமை (8) அப்பகுதியில் உள்ள காட்டுக்குள் சென்றுள்ளனர்
ஏனைய மூவர் தப்பித்து அவர்களின் கிராமத்து பகுதிக்கும் 2 பேர் புத்தளம் பகுதி நோக்கிச் சென்றுள்ளதாக தப்பித்து வந்தவர்கள் மூலம் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது
தப்பித்து வந்த ஒருவரின் உதவியுடன் புத்தளம் பகுதி காடுகளுக்குள் சென்ற இருவரை தேடி விசேட அதிரப்படையினர் சென்றுள்ளதாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது
இறந்தவர் 52 வயதுடைய ஆறு பிள்ளைகளின் தந்தை என்பதுடன் இவரது சடலம் இலவன்குளம் பூக்குளம் பகுதியில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலவன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது