( வாஸ் கூஞ்ஞ) மன்னார் மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு 204 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் ஜனவரி மாதம் இதுவரை 54 பேர் டெங்கு நோயாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.வினோதன் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட செயலகத்தில் செவ்வாய் கிழமை (09) நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.வினோதன் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்
மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட டெங்கு தடுப்பு மற்றும் முகாமைத்துவ சம்பந்தாமக கலந்துரையாடப்பட்டது.
இதில் டெங்கு மற்றும் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற சகல திணைக்களங்கள் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு 204 பேர் டெங்கு யோயினால் பாதிக்கப்பட்டமை கண்டறியப்பட்டது.
இதில் அதிகளவானவர்கள் கடந்த மாhகழி மாதம் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த வருடம் (2024) இதுவரை 54 பேர் டெங்கு நோயினால் பாதிபடைந்துள்ளனர்.
ஆகவே இந்த டெங்கு மன்னாருக்கு பெரும் பிரச்சனையாக இல்லாதபோதும் தடுப்பு நடவடிக்கையில் நாம் தீவிரமாக ஈடுபட வேண்டியுள்ளது.
ஏனென்றால் தற்பொழுது பெய்து வரும் மழை அத்துடன் வீடுகளில் நீர் சேமித்து வைக்கப்படுகின்ற கொள்களன்கள் பாவிக்கப்படுவதால் இதனால் நுளம்புகள் பெருகும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது.
அத்துடன் கழித்து விடப்பட்ட ரயர்கள் வீடுகளில் இருக்கின்ற குளிர்சாதனப் பெட்டிகளின் நீர் பாத்திரத்திலும் நுளம்புகள் பரவக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன.
ஆகவே இவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என நாம் பொது மக்களை வேண்டி நிற்கின்றோம்.
டெங்கு சாதாரணக் காய்ச்சல் மற்றும் குருதியுடான காய்ச்சல் என இரண்டு வகையான காய்ச்சல்கள் உருவாகும்.
இந்த இரண்டும் ஆரம்பத்தில் ஒரே அறிங்குறியான காய்ச்சலாகவே காணப்படும்.
தலையிடி . தலையில் பின்புறமான நோவு . உடல் நோவு , மெல்லிய வயிற்று நோவு ஆகியன இந்த இரண்டு காய்ச்சலுக்கும் ஆரம்ப அறிகுறியாக இருந்தாலும் டெங்கு குருதி பெருக்கான காய்ச்சல் காணப்பட்டால் இவர்கள் கட்டாயமாக வைத்தியசாலையை நாடியே ஆக வேண்டும்.
குருதி பெருக்கான காய்ச்சல் உள்ளவர்கள் கட்டாயம் வைத்திசாலையில் தங்கியிருந்தே சிகிசிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் மரணத்தை தவிர்த்துக் கொள்ளலாம் என இவ்வாறு மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.வினோதன் இவ்வாறு தெரிவித்தார்.