(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) சீரற்ற காலநிலையினால் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளின் தாழ் நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அத்தோடு மழையானது தொடர்ச்சியாக பெய்துவருவதனால் மட்டக்களப்பு ரயில் நிலையமும் வெள்ளத்தினால் மூழ்கி காணப்படுகின்றது.தற்போதைய நிலையில் ரயில் பயணங்கள் இடம்பெற்றாலும், குறித்த பகுதியில் வெள்ள நீர் அதிகரிக்குமாயின் ரயில் போக்குவரத்தினை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.