மட்டக்களப்பில் தொடர்ந்தும் கனமழை.

(ரக்ஸனா) மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் பலத்த கன மழை பொழியத் துவங்கியுள்ளது. இதனால் தாழ்நிலங்கள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதனால் அதிகளவு மக்கள் தமது வீடுகளிலிருந்து தற்காலிகமாக இடம்பெயர்ந்து உறவீனர்களின் விடுகளில் தங்கிள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

இது இவ்வாறு இருக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட களுதாவளை, களுவாஞ்சிகுடி, தேத்தாதீவு, செட்டிபாளையும். மாங்காடு, குருக்கள்மடம், பட்டிருப்பு, எருவில், குருமண்வெளி உள்ளிட்ட பல கிராமங்களில் வெள்ளநீர் வழிந்தோட முடியாமல் தேங்கியுள்ளதனால் மழையாலத்தில் மக்கள் உள்ளுர் போக்குவத்து செய்வதிலும் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றர்.

இந்நிலையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் வீதிகளில் தேங்கிள்ள வெள்ள நீரை பெக்கோ இயந்திரம் மூலம் வெட்டி வெளியேற்றுவதற்குரிய தற்காலிக நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் செவ்வாய்கிழமை காலை 8.30 மிணவரையில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 123.3 மில்லி மீற்றர் மழை வீழ் ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி சு.ரமேஸ் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறு இருக்க மாவட்டதிலுலுள்ள உன்னிச்சை, உறுகாமம், நவகிரி, வாகனேரி, தும்பங்கேணி உள்ளிட்ட பல பிரதான குளங்கள் வான்வாய்ந்து வருவதுடன். வெல்லாவெளி, பழுகாமம், களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேத்ததீவு, உள்ளிட்ட பல இடங்களில் அமைந்துள்ள சிறிய குளங்கள் நிரம்பி வழிவதாக குளங்களுக்குப் பொறுப்பான நீர்பாசன பெறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.