கனகராசா சரவணன்)
மட்டு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்;ள பிரதேசம் ஒன்றில் 15 வயது சிறுமி ஒருவரை அழைத்துச்சென்று கூட்டுப் பாலியல் துஸ்பிரயோம் மேற்கொண்ட 3 பேரை நேற்று ஞாயிற்றுக்கிமை (07) கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்டசிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் சம்பவதினமான சனிக்கிழமை (06) 15 வயதும் 7 மாதங்களும் கொண்ட சிறுமியை அந்தபகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவர் வீடு ஒன்றிற்கு வரவழைத்து அங்கு அவரின் நண்பர்கள் இருவர் உட்பட 3 பேர் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் மோற்கோண்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி உறவினரிடம் தெரிவித்ததையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து காத்தான்குடி பெரும் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி கஜநாயக்கா தலைமையில் விசாரணைகள் மேற்கொண்டுவந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறுமியை பாலியல் துஸ் பிரயோம் மேற்கொண்ட அந்த பகுதியைச் சேர்ந்த 26,26, 32 வயதுடைய 3 பேரை நேற்று கைது செய்தனர்.
இதில் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.