மருதமடு அன்னையின் பங்கு தளங்களின் தரிசிப்பின் ஆரம்பம் கோலாகலமாக ஆரம்பித்துள்ளது.

(வாஸ் கூஞ்ஞ) 1924 ஆம் ஆண்டு கொழும்பு ஆயரும் இவருடன் இணைந்து இந்தியாவிலிருந்து வந்த ஆயரும் மற்றும் ஆயர்களும் இணைந்து மடு அன்னைக்கு முடி சூட்டப்பட்டு 100 வது ஆண்டு யூபிலி தினத்தை முன்னிட்டு மடு அன்னையிள் திருச்சுரூபம் மடுவிலிருந்து மன்னார் வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய மன்னார் மறைமாவட்டங்களின் பங்குத் தளங்களுக்கு ஞாயிறு (07) முதல் கொண்டு செல்லப்படுகின்றன.

‘மரியன்னையோடு நம்பிக்கையின் திருப்பயணிகளாகும்’ என்ற கருப்பொருளுக்கேற்ப மக்களின் தேவைகள் நிறைவேறப்படவும் . நாட்டில் அமைதியான சூழ்நிலை உருவாக வேண்டும் என்றும் சமாதானத்துக்கான ஒரு திருப்பயணமாக இது அமைவதாக மன்னார் திருஅவையால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இத்திருப்பயணம் இடம்பெறுகின்றது.

இதற்கமைய முதல் நாளாக திருச்சுரூபம் ஞாயிற்றுக் கிழமை (07) காலை மன்னார் பேராலயத்துக்கு மாதா அழைத்து வரப்பட்டாள்.

வாகன பவனிகளுடன் மன்னார் தீவுக்குள் திருச்சுரூபம் வருகை தந்ததும்  மன்னார் ஆயர் உட்பட மதக்குருக்கள் பொது மக்கள் என பலரும் வரவேற்று மன்னார் நகர் மத்தியில் மருதமடு சுரூபத்தின் முன்பாக வரவேற்கப்பட்டது.

ஆயர் அவர்களால் செபமாலை வடிவம் கொண்ட பலூனும் சமாதான புறாவும் பறக்கவிடப்பட்டன. அத்துடன் இதன் ஞாபகர்த்தமாக மன்னார் நகர் மத்தியில் அமைந்துள்ள மருதமடு வளாகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் ஞாபக சின்னம் ஆயரால் திறந்து வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மன்னார் பேராலயதத்pல் பேராலய பரிபாலகர் அருட்பணி அகஸ்ரின் புஸ்பராஜ் அடிகளால் தலைமையில் உதவி பங்கு தந்தையருடன் கூட்டுத்திருப்பலி  ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் திங்கள் கிழமை (08) காலை 8 மணி வரை பக்தர்களின் வழிபாட்டுக்காக ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.